மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெண்டல் டார்ச்சர்... வெளிநாட்டில் தற்கொலை.! மனைவி தாசில்தாரிடம் உருக்கமான வேண்டுகோள்.!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈராக் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தாசில்தாரிடம் மனு அளித்திருக்கும் அவரது மனைவி தனது கணவரின் உடலை பெற்றுத் தருமாறு உருக்கமான கோரிக்கை வைத்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா. கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டிற்கு வேலைக்காக சென்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசிய அவர்.மறுநாள் அதிகாலை 4 மணியளவில் வாட்ஸ்அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்திருக்கும் அவரது மனைவி "தனது கணவர் தன்னிடம் பேசும் போது நன்றாகத் தான் இருந்தார் என்றும் தனக்கு அனுப்பிய வீடியோ மெசேஜில் சிலர் தன்னை மனதளவில் மிகவும் துன்புறுத்துவதாகவும்" தெரிவித்திருக்கிறார். அவரது புகைப்படத்தையும் சில வீடியோக்களையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றியவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது முதலில் எதுவும் பேச மறுத்தவர்கள் சிறிது நேரம் கழித்து எனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது உடலை பெற்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படியும் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். இந்த மனு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.