மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபத்தான வகையில் பட்டாசு வெடித்த ஆர்வக்கோளாறுகள் அடுத்தடுத்து கைது.. வீடியோவை வைத்து வலைவீசும் காவல்துறை.!
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து, தீபாவளியை சிறப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு முன்னதாக கடந்த வாரத்தில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில இளைஞர்கள் பட்டாசுகளை தங்களின் இருசக்கர வாகனத்தின் முன்புறம் கட்டி, அதனை வெடித்து சாகசம் செய்த வீடியோ பதிவிட்டு வந்தனர்.
ஒருவர் செய்ததை மற்றொருவரும் செய்ய ஆசைப்பட்டு சென்னை, திருச்சி, தூத்துக்குடி என பல நகரங்களை சேர்ந்த இளைஞர்கள், இவ்வாறான ஆபத்து மிகுந்த செயலை செய்திருந்தனர்.
இதுகுறித்த அதிர்ச்சி காணொளிகள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது காவல் துறையினர் சென்னையை சேர்ந்த ராஜ், திருச்சியை சேர்ந்த அஜய் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனுக்கு வலைவீசப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட பலரையும் காவல்துறை தேடுகிறது.
எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சி வச்சான், இப்ப நிறைய பேரு இதே மாதிரி பைக்ல வெடி கட்டி வீடியோ போட ஆரம்பிச்சிட்டானுக. pic.twitter.com/cpofhXjV6W
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) November 12, 2023
Dear Tuticorin police,
— breakingbhakat (@breakingbhakat) November 11, 2023
Do you dare to arrest this person. It is getting trend in roads. Immediately stop this nonsense.
Place: Tuticorin
TN 69 BQ 5981
Date: nov 08 2023
Innocent citizen life is at stake. pic.twitter.com/HuQj8sNpEU
Car லயும் வைக்க ஆரம்பிச்சிட்டானுக 🤬🤬🤬 https://t.co/DPmRpBi8jr pic.twitter.com/YDvKSpSeqA
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) November 12, 2023