திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயகாந்தின் மறைவால் உச்சகட்ட சோகத்தில் தொண்டர்கள்; மொட்டை அடித்து அஞ்சலி.!
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடு மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊரில் இருந்தவாறு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம், அவனியாபுரத்தை சேர்ந்த தொண்டர்கள் துக்கத்தை தாங்க இயலாமல் தனது தலைவரை இழந்த சோகத்தில் மொட்டை அடித்து தங்களின் துக்கத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அரசியல்கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று தங்களின் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.