மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பை ஏற்படுத்திய தி.மு.க கவுன்சிலர் மகனின் தற்கொலை: காரணம் புரியாமல் விழிபிதுங்கும் போலீசார்..!
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் தி.மு.கவில் வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி பேபி ஏஞ்சலின். இவர் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்த தம்பதியரின் மகன் கதிர்வேல் (25). இவர் எஞ்சினியரிங்கில் பட்டையப் (Diplomo) படிப்பை முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் பனிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் கதிர்வேல் தனது படுக்கையறையில் இருந்து வெளியே வராததால் அவரது தாயார் அவரது அரைக்கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல்தூறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.