திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மொய் விருந்தில் ரூ.11 கோடியை அள்ளிய வசூல் சக்கரவர்த்தி: தி.மு.க எம்.எல்.ஏ-வின் சாதனை..!
தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்படுவது வழக்கம். மொய் விருந்து நடத்துபவர்கள், விருந்தில் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இந்த விருந்து நடத்தப்படுகிறது. இந்த நிலையில். பேராவூரணி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் மொய் விருந்து நடத்தினார்.
பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மொய் விருந்துக்கான ஏற்பாட்டை அசோக்குமார் விமரிசையாக செய்திருந்தார். மொய்விருந்து விழாவில் 100 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 1000 கிலோ கறியுடன் சமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இலை நிறைய சோறும், போதுமான அளவு கறியும் வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 1000 பேர் சாப்பிடும் வகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த மொய் விருந்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. மொய் விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதுவதற்காக, பணம் என்னும் இயந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். நேற்று மாலை வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.