மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாந்தோப்பில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர்! ஒன்றிணைந்த திமுக பிரமுகர்கள்! சிலருக்கு கொரோனா!
தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது குறித்து எவ்வித கவலையுமின்றி கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மாந்தோப்பு ஒன்றில் 50-ஆவது பிறந்த நாளை தடபுடலாகக் கொண்டாடியிருக்கிறார். அங்கு கறி மற்றும் மது விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது.
அந்த பிறந்தநாள் விழாவில் திமுக பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 அரசு அலுவலர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த குணசேகரன் தலைமறைவாகிவிட்ட நிலையில், பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.