திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்?; ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேட்டி.!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை முதலாக அமலாக்கத்துறை அதிகாரியின் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து திமுக வட்டாரம் பரபரப்பில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடியின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கண்டனம் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், "திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின், அவரின் பிறந்தநாளில் பிரதமராக யார் வரலாம் என்று கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, இன்று பொன்முடியின் வீட்டில் நடக்கிறது. அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்வது ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை.
இதனால் அரசு அதிகாரிகளை பயன்படுத்தி வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, 2006-2011 இடைப்பட்ட காலத்தில் பொன்முடியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்" என கூறினார்.