திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிகிச்சைக்காக கேப்டன் அமெரிக்கா பயணம்; மீண்டும் உடல்நலக்குறைவு.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இரண்டாவது கட்ட மருத்துவ சிகிச்சைக்காக
மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து அதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கட்சி தொடங்கி தான் சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களிலும் கணிசமான வெற்றிகளை பெற்று பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்ட தேர்தலில் பின்னடைவை சந்தித்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தனது கட்சிக்காக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவருடைய குரல் வளம் மிகவும் மோசமானதால் பல்வேறு தரப்பினரும் அவருடைய கருத்துக்களை சித்தரித்து விமர்ச்சித்து பேசி வந்தனர். இதனால் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு சமீபத்தில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Vijayakant (@iVijayakant) December 18, 2018
தற்போது மீண்டும் அவரது குரல் வளை மற்றும் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று காரணமாக இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அவரது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.