மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்.. அடித்து நொறுக்கிய உறவினர்கள்.!
திருப்பத்தூர் அருகே சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவரை உறவினர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள போஸ்கோ நகரில் 22 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவர் தியாகராஜன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனிடையே மருத்துவர் தியாகராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பின்னர் மருத்துவமனையை சேதப்படுத்தியதாக மருத்துவர் தியாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சுரேந்தர், கோகுல், நரேஷ், ராகுல் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.