மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாக்டர் செய்யுற வேலையா இது? இளம்பெண் குளியலறையில் ரகசிய கேமரா!
சென்னை ராயபுரம் அருகே பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் முதுநிலை பல் மருத்துவ மாணவரான இப்ராஹிம் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில், இவர்களுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த வீட்டில் இளம்பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக ஸ்பை பேனா என்ற கேமராவை செட் அப் செய்து வைத்துள்ளார்.
இந்த கேமரா மூலம் பதிவாகும் குளியலறை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குளியலறையில் சந்தேகத்திற்கு இடமாக அந்த பேனா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கணவரிடம் காண்பித்த போது அது கேமரா என்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் தனது கணவருடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதுநிலை பல் மருத்துவ மாணவரான இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார்.