தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பத்தினரை கண்ணீருடன் தேடி வரும் நாய்.!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி என்ற இடத்தில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டில் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
அந்த நிலச்சரிவில் 25 வீடுகளில் வசித்து வந்த 80க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை, கேரள வனத்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மண்ணில் புதைந்த ஒரு குடும்பம் நன்றியுள்ள ஜீவனான ஒரு நாயை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாயானது இந்த அதிபயங்கர நிகழ்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கரமாக குரைத்து குடும்பத்தினரை எச்சரித்ததாகவும், ஆனால் தூக்கத்தில் இருந்த குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள் இந்த கொடூர நிகழ்வு நிகழ்ந்து விட்டது.
மேலும் மீட்புப் படையினர் மண்ணிலிருந்து ஒவ்வொரு உடலாக எடுக்கும் போது இந்த நாயானது ஓடி சென்று தனது குடும்பதினரா என பார்த்து வருவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கவலைதேய்ந்த முகத்தோடு, கண்ணீரோடு கடந்த 6 நாட்களாக பிரிந்த தனது குடும்பத்தினரை தேடி வருகிறது.