திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போஸ்டர் அடித்த இளைஞர்..! ஆடிப்போன போலீசார்..!
பெற்றவர்களை தெருவில் விட்டு செல்லும் இந்த காலத்தில், இளைஞர் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் குட்டி ஒன்றை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது, அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. மற்றும் நல்இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் அங்கு வசிக்கும் மக்களின் இல்லகதவுகளை
தட்டும் சப்தம் அதிகரித்து வருகிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில், அதே மாவட்டத்தின் உள்ள இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் தான் வெங்கடேசன். இவர் தனது குடும்பத்துடன் அவர்களது உறவினர் வீட்டின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.
பின்பு, இரண்டு நாள் கழித்து வீடு திரும்பயில் அவர் செல்லமாக வளர்த்த நாய் குட்டியை காணவில்லை என்று தெரிந்தவுடன், எவ்வளவு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, எனது நாயை மர்ம நபர்கள் யாரேனும் தான் கடத்தி சென்றுருக்க வேண்டும் என்றும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்கள் விரைவில் எனது நாயை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போஸ்டர் அடித்து அவரது தெரு முழுவதும் ஒட்டியுள்ளார்.