ஒருவழியாக ஓகே சொன்ன டொனல்டு டிரம்ப்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ஜோ பைடன் அணியினர்.!



donald trump agrees to Biden administration

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை வைத்து வந்தார். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யவதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்து உள்ளார். ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

Trump

அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்த்துவந்த  டொனால்டு டிரம்ப் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பைடன் அதிபர் பதவியை ஏற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) என்ற அரசு அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார். ஜோ பைடன் அணியினர், டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிகார மாற்றமுடிவை வரவேற்று உள்ளனர்.