மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மே 31 வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம்" பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் மே 31 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மூன்றாம் கட்டமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது வரும் மே 17 ஆம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. அதற்க்கு அடுத்தது என்ன செய்யலாம் என்பது குறித்து இன்று பிரதமர் மோடி அணைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 31 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம்" என கூறியுள்ளார். மே 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து நாட்டின் 15 முக்கிய நகரங்களுக்கு அனுப்புவதாக திட்டமிட்டுள்ளதில் சென்னையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.