திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பட்டப்பகலில் இரட்டை கொலை: போலீஸ் ஸ்டேஷன் அருகில் துணிகரம்..!
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகேயுள்ள மணிமங்கலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (23). எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 20). நண்பர்களான இவர்கள் இருவரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம கும்பல் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்ட மணிமங்கலம் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் குரோம்பேட்டை உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் இந்த இரட்டை கொலையில் தொடர்புடைய மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை தெருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (22), மணிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19), மேற்கு மாடவீதியை சேர்ந்த லோகேஸ்வரன் (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த மார்ச் மாதம் தங்ககது நண்பரான தேவேந்திரன் (23) என்பவர் வெட்டி படு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து கத்திகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.