மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் நடத்தையில் சந்தேகம், ஆத்திரத்தில் மகன் செய்த விபரீத செயல்...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த படுத்த பூவந்தி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் திருஞானம் - அருள்ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அருள்ஜோதி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 வருடங்களாக கணவரை பிரிந்து தனது இரண்டு மகன்களுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளார்.
அருள்ஜோதியின் மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இளைய மகன் விஷ்ணு பிரபு உள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு பிரபுவுக்கு தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு விஷ்ணு பிரபு தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் விஷ்ணு பிரபு அரிவாளால் தாயை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தப்பி ஓடிய விஷ்ணு பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.