மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுமை., சிசுக்கலைப்பு.. மாமியாரின் அட்டூழியத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருமகள்..!!
மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததால், மனமுடைந்து மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உளள வேளச்சேரியை சார்ந்தவர் இந்துமதி (வயது 25). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்ட வரதட்சணைகள் போதாது என்று இந்துமதியின் மாமியார் வரதட்சணை கொடுமை செய்தவந்ததாக தெரிய வருகிறது.
இதனால் இந்துமதி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தநிலையில், அவர் 4 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். இந்த தகவலறிந்த அவரின் மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததோடு நிறுத்தாமல், வயிற்றில் வளரும் சிசுவையும் கலைக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்துமதி வாட்சப்பில் தற்கொலை ஆடியோ பதிவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த வேளச்சேரி காவல்துறையினர் இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பெண்வீட்டார் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், இந்துமதி வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த பதிவில் தனது மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததாகவும், தனது வயிற்றில் வளரும் 4 மாத சிசுவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.