53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
என்னடா இது ஒரு உளுந்தவடையால் முதியவருக்கு ஏற்ப்பட்ட சோகம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரை சேர்ந்தவர் 75 வயது மதிக்கத்தக்க மணி என்ற முதியவர். இவர் தினம் மது குடிப்பதை வழக்கமாக கொண்டவர். ஒரு மது குடிப்பதற்காக தனது கிராமத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி சென்றுள்ளார்.
அங்கு சரக்கு வாங்கிய முதியவர் சரக்குக்கு சைட்டிஷ்ஷாக உளுந்தவடையை வாங்கியுள்ளார். இரண்டையும் வைத்து மதுகுடித்து கொண்டிக்கும் போது எதிர்பாராத விதமாக வடை முதியவரின் தொண்டையில் மாட்டி கொண்டுள்ளது.
இதை கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மற்றும் குடிமகன்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் வடை தொண்டையில் சிக்கி கொண்டு வராததால் மயங்கி விழுந்துள்ளார் முதியவர் மணி. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் என்னடா இது ஒரு வடையால் முதியவருக்கு வந்த சோகத்தை பற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர்.