மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலா பயணிகளுக்கு போதைக்காளான் விற்ற இளைஞர் கைது.!
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் போதை காளான் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருடைய பெயர் ஜெகநாதன் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த போதை காலாணை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்தனர்.