மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய போதையில் பயணிகளை ஏற்றிச்சென்ற சேர் ஆட்டோ ஓட்டுநர்.! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து.!
சென்னை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தாம்பரத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அப்போது மூன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் வேகமாக வந்து மோதியது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் குமாருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். ஷேர் ஆட்டோவில் பயணிந்த மூவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர், அங்கு நடந்த விபத்தை கண்ட பொதுமக்கள் காயமடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் குமாரிடம் விசாரித்தபோது, அவர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. அங்கு நடந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.