மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கு போதையில் சவுண்ட் பாக்ஸ் வைத்து அலப்பறை.. தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து..!
வீட்டு வாசலில் காரை நிறுத்தி அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட இருவரை, வீட்டின் உரிமையாளர் தட்டிக்கேட்டதால், மதுபோதையில் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் அருகாமையில் சுல்தான்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்தர் மற்றும் இவரது மகன் சந்துரு. இவர்களுக்கு சொந்தமான காரை தனது வீட்டிற்கு முன் நிறுத்த இடமில்லாத காரணத்தால், அதே பகுதியை சேர்ந்த கோடிஸ்வரன் என்பவரது வீட்டின் முன் நிறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இரவு நேரங்களில் அதே காரில் அமர்ந்து மது அருந்துவது மற்றும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்து நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் தொந்தரவாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இதே போன்று அவர்கள் மீண்டும் செய்துவந்த நிலையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களுக்கு மிகவும் இடையூறாக இருந்ததால், வீட்டின் உரிமையாளர் கோடீஸ்வரன் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த இளைஞர் ஆத்திரமடைந்து காரில் இருந்த கத்தியை எடுத்து கோடீஸ்வரன் குத்தியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து கோடீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கோடீஸ்வரனிடம் விசாரித்து, தலைமறைவான சந்துரு மற்றும் அவரது தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.