மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
68வயது மூதாட்டியின் வாயை பொத்தி கதற கதற அரங்கேறிய சம்பவம்.. மதுபோதை ஆசாமி கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 75 வயது உடைய அக்காவும், 68 வயதுடைய தங்கை என 2 மூதாட்டிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களில் தங்கையான 68 வயது மூதாட்டிக்கு திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. இதில் அக்கா வீட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்றும் அவர் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் 68 வயது மூதாட்டி மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.
இதில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்க முடியாத மூதாட்டி அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தனது அக்காவிடம் நடந்த கொடூர சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வடிவீஸ்வரம் பகுதியில் மதுபதியில் சுற்றி திரிந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.