மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புரோட்டா காலியானதால் ஹோட்டலை சூறையாடிய போதை ஆசாமிகள்!
ராமநாதபுரம் அருகே புரோட்டா காலியானதால் ஹோட்டல் உரிமையாளரை போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள தினியாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லதீப். இவர் சாயல்குடி கன்னியாகுமரி செல்லும் சாலையில் ஜமாலியா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் 4 இளைஞர்கள் உணவகத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது புரோட்டா உள்ளிட்ட உணவு பொருட்கள் தீர்ந்து போனதால் கடையை மூட அப்துல் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் ஓட்டல் உரிமையாளரிடம் சாப்பிட புரோட்டா போட சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
அப்போது அப்துல் லத்தீப் புரோட்டா தீர்ந்து விட்டது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 போதை ஆசாமிகளும் ஹோட்டலில் இருந்த விறகு கட்டையால் உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் ஹோட்டல் உரிமையாளர் அப்துல் லத்தீவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் அப்துல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.