மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவானில் விமானத்தில் மது போதையில் தகராறு செய்த நபர் கைது!
விமானத்தில் மது போதையில் தகராறு செய்த திருவாரூர் மதுபோதை வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் நேற்று காலை சென்னை வந்தடைந்தது. முன்னதாக அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, முகமது அசாருதீன் என்ற இளைஞர் மதுபோதையில் தகராறு செய்துள்ளார்.
அதன்படி விமானத்தில் இருந்த பெண் பயணிகளையும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்திற்குள் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விமான பணிப்பெண்கள், முகமது ஆசாருதீனை அமைதி படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமானம் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும் தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் தகராறு செய்த முகமது அசாருதீனை பிடித்து குடியுரிமை சோதனை, சுங்க சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் துபாயில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை வேலை செய்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.