திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.." டிரான்ஸ்பார்மரில் 'பிரேக் டான்ஸ் 'ஆடிய குடிமகன்.! பரபரப்பு சம்பவம்.!
தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் திறந்த நாள் முதல் மது புழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு செய்யும் சேட்டைகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயிருக்கும் ஆபத்தானதாக முடிகிறது .
இந்நிலையில் குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோவில் அருகே இளைஞர் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மது போதையில் இருந்த இளைஞர் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி பக்தி பாடல்களை பாடி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இளைஞரும் மது போதையில் அவ்வாறு செய்தாரா.? அல்லது தற்கொலை செய்து கொள்வதற்காக இதுபோன்று செய்தாரா.? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என பலமுறை எச்சரித்தும் குடிமகன்கள் கேட்பதாக இல்லை என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.