#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓசியில் தான் பிரியாணி சாப்பிடுவேன்! அடம்பிடித்த போதை ஆசாமி செய்த தகராறு!!
சூளைமேட்டில் உள்ள பெரியார் பாதை பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார். இவர் கோடம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு நேரத்தில் போதையில் வந்த இளைஞர் ஒருவர் அருண்குமாரிடம் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் அருண்குமார் பணம் இருந்தால் பிரியாணி வாங்கி செல் என்று கூறியுள்ளார். இதனால் இருவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த போதை இளைஞர், அருண்குமார் கடையில் இருந்த பாத்திர பண்டங்களை நொறுக்கியுள்ளார்.
இவரது இந்த செய்கையால் கடையில் சாப்பிட்டு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த போதை இளைஞரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அந்த போதை இளைஞர் அதே பகுதியில் வசித்து வரும் ரவுடி கோவிந்தராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை தேடி வருகிறார்கள். இவர் மீது முன்னதாகவே கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.