மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் தகராறு செய்த நபர்.. தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை.!
திருப்பூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த நபரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் மது போதை ஆசாமி ஒருவர், அந்த கிராமத்தில் தகராறு செய்து வந்துள்ளார்.
அதன்படி ஒரு வீட்டின் முன்பு சென்று ஆபாச வார்த்தைகளை பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட அந்த குடும்பத்தினை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ரத்தினம், புஷ்பவதி மோகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் மது போதை ஆசாமியால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் போதை ஆசாமியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.