மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் தகராறு.. கூலித்தொழிலாளி ஓட ஓட வெட்டி படுகொலை!
தூத்துக்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தாலங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூலையில் நல்லையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மறுமண நபர்கள் சுரேஷின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சுரேஷ் ஓட ஓட விரட்டி விரட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நடந்த விசாரணையில் மது போதையில் தகராறு செய்ததில் சுரேஷை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.