மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய மது போதை தாயை கட்டி போட்டு உயிருடன் எரித்த கொடூர மகன்!
கன்னியாகுமரி அருகே மகன் மது போதையில் தாயை கட்டிப்போட்டு உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநில எல்லைக்குட்பட்ட வெள்ளறடை காற்றாடி பகுதியை சேர்ந்தவர் நளினி. இவருக்கு மோசஸ் என்ற மகன் உள்ளார். இதில் மகன் மோசஸ் வேலைக்கு எங்கும் போகாமல் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார். மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மோசஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை மோசஸ் தனது தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதில் தாய் பணம் தராததால், ஆத்திரமடைந்த மோசஸ் தாய் நளினியை கட்டி போட்டு உயிருடன் தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் டீ பறவையின் நிலையில் நளினி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து நளினியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே வெள்ளறடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.