திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வர்தா புயலின் போது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. 6 வருடங்கள் கழித்து அம்பலமான பரபரப்பு உண்மை.!
தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. பல வருடத்திற்கு முன்னர் தங்களின் உறவினர்கள், ஆண் நண்பர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரால் வெவ்வேறு தருணங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இவ்வாறான புகார்கள் அனைத்தும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறுவயதில் ஏற்படும் பாலியல் ரீதியான பாதிப்பு, அவர்களின் மனதில் ஆழமான வடுக்களாக அமைவதால் ஆயுள் முழுவதிலும் அந்த பயம் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும், சிறுமிகள் தங்களின் அறியாத வயதிலேயே அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 6 வருடத்திற்கு முன்னர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது பதினோராம் வகுப்பு படிக்கையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் வருடம் வர்தா புயலின் போது, புரசைவாக்கம் பகுதியை சார்ந்த சிறுமியின் பெற்றோர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். சிறுமியின் பெரியப்பாவே இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
வீட்டின் மொட்டை மாடியில் சிறுமி விளையாட செல்லும் போது, சிறுமியை கட்டிப்பிடித்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியப்பாவால், சிறுமியின் நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டில் தனியாக இருக்க அச்சப்பட்டு, வீட்டில் எந்த நேரமும் யாரேனும் ஒருவர் இருங்கள் என்று கூறி அடம் பிடித்து இருக்கிறார். பெற்றோர்கள் யாரேனும் வெளியே சென்று வருகிறேன் என்று கூறினால், அதற்கு சிறுமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
மேலும், யாராவது ஒருவர் என்னுடன் இருங்கள், எனக்கு தனியாக இருக்க பயமாக உள்ளது என கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார். வயது குறைவாக இருப்பதால் தனியாக இருக்க பயம் கொள்கிறாள் என்று பெற்றோர் எண்ணிக்கொள்ள, சிறுமியின் பயமோ தொடர்ந்து அதிகரித்து சென்றுள்ளது. பள்ளிக்கூடத்திற்கு தனியாக சென்று வரவும் அஞ்சி நடுங்கிய நிலையில், ஆண்களை கண்டாலே உடல் நடுக்கம் காண தொடங்கியுள்ளது. தாமதமாக சுதாரித்த பெற்றோர், சிறுமியிடம் மனம்விட்டு பேசியுள்ளனர்.
முதலில் பெற்றோரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த சிறுமி, பின்னர் தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். 5 ஆம் வகுப்பு படித்து வருகையில் மாடியில் வைத்து பெரியப்பா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்கு பின்னரே உடலில் நடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளதையும் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர், வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி தனது சகோதரியுடன் மாடிக்கு சென்று விளையாடும் போது, பெரியப்பா தன்னிடம் பலமுறை அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்காத பல அதிர்ச்சி விஷயங்களையும் கூறியுள்ளார். இது காவல் துறையினருகே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
வர்தா புயல் வீசிய ஒரு மாதத்தில் 5 முறை சிறுமியிடம் பெரியப்பா அத்துமீறியது உறுதியாகவே, சிறுமியின் பெரியப்பாவான 59 நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் அவ்வப்போது பித்துப்பிடித்தார் போல செயல்பட்டு, ஒருவித அச்சத்துடன் 6 வருடமாக வசித்து வந்துள்ளார். இதனால் காவல் துறையினர், குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமிக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர்.