மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்ப கூப்பிடுங்கய்யா நம்ம பரோட்டா சூரிய..! மாபெரும் பரோட்டா சாப்பிடும் போட்டி..!
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்தை சேர்ந்த நெய்தலூர் காலனியில் சுதாகர் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலின் உரிமையாளர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்துள்ளார்.
இந்த போட்டி குறித்த நோட்டீஸ் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் போட்டி நாளை 13-01-2021 புதன்கிழமை நடைபெறும் என்றும் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
15 நிமிடத்தில் 20 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு பொங்கல் பரிசு 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றிபெற்றவர் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் வழங்க தேவையில்லை எனவும், போட்டியில் தோல்வியுற்றவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நோட்டிஸ் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நோட்டிஸிற்கு "இப்ப கூப்பிடுங்கய்யா நம்ம பரோட்டா சூரிய" என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.