#Breaking: மீண்டும் அதிரடி.. தமிழ்நாட்டில் 40 இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கப்போகும் மணல் குவாரி புள்ளிகள்?.!



ED Raided Various Locations of TN on Sand Quarry Businessman

 

அமைச்சர் பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி, ஊழல் புகாரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து, தமிழகம் முழுவதும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தி வரும் தொழிலதிபர்களின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக துப்பாக்கி ஏந்திய மத்திய படையையும் அவர்கள் அழைத்து வந்துள்ளனர். 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் மணல்குவாரி முக்கியப்புள்ளி ராமச்சந்திரனுக்கு சொந்தமான அங்களில் அமலாக்கத்துறை துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் சோதனை நடத்துகிறது. 

திண்டுக்கல்லை சேர்ந்த மணல் குவாரி முக்கியப்புள்ளி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. இதேபோல, தமிழ்நாட்டில் 40 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருடன் தொழில்முறை தொடர்பில் இருந்தோரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனைகள் அதிரடியாக தொடருகின்றன. மணல்குவாரி புள்ளிகள் அரசியல் சார்ந்த ஈடுபாடிலும் இருக்கின்றனர் என்பதால், அடுத்த அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.