காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஊரடங்கு நேரத்தில் தொழிற்சாலைகளை மீண்டும் அனுமதிக்கலாமா.? முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில், தொழிற்சாலைகளை மீண்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து, தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் எண்ணிக்கை குறையாததால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் அத்தியாவசிய உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்ட தொழிற்சாலைகள் தவிர வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் பல தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் தொழிலதிபர்கள் முதல்வரிடம் பேசுகையில், மீண்டும் தொழிற்சாலைகளை திரும்பத் தொடங்குவதில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சிக்கல்கள் உள்ளன. வருமானம் இல்லாத நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் பல்வேறு இடற்பாடுகளை தொழிற்சாலைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கிகளில் இருந்து பணம் பெற்று சம்பளத்தை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சரின் முடிவின் அடிப்படையில் அணைத்து தொழிற்சாலைகளும் செயல்படுவோம். தொழிற்சாலை இயக்கத்தை அதற்கான தரத்தோடும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இயங்குவோம் என தெரிவித்தனர்.