திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#ViraVideo: எடப்பாடி பழனிச்சாமி முன்பே சின்னம்மா துரோகி என கூச்சலிட்ட இளைஞர்.. முகநூலில் நேரலை பதிவிட்டவாறு பகீர் செயல்..!
விமான நிலையத்திற்குள் பயணித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இளைஞர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்திருந்தார். மதுரை விமான நிலையம் சென்றதும், விமான பயணிகள் அனைவரும் பேருந்து உதவியுடன் விமானம் தரையிறங்கிய இடத்தில் இருந்து நுழைவு பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில், அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்த பயணி ஒருவர், தனது தொடுதிரை அலைபேசியில் முகநூலை திறந்து நேரலை பதிவிட்டவாறு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தார்.
"எதிர்க்கட்சி தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்து வருகிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிடம் துரோகம் செய்தவர். 10.5% தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்" என கூச்சலிட்டார்" என முழக்கமிட்டார்.
இந்த விஷயத்தை முதலில் கேட்டும் கேட்காது இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உதவியாளர், விரைந்து வந்து இளைஞரின் செல்போனை பறித்துக்கொண்டார். விசாரணையில், அவரின் பெயர் ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த இளைஞர் கோஷமிடுவதற்கு முன்புதான் மற்றொரு விமான பயணி எடப்பாடி பழனிசாமியை நேரில் கண்டதும் இருகரம் கூப்பி வணக்கம் சொன்னவாறு சென்றார். பதிலுக்கு பழனிசாமியும் இருகரம் கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார். அடுத்த கணமே எதிர்தரப்பு கோஷமும் இடம்பெற்றது.
#துரோகியுடன்_பயணிக்கிறேன்
— திருச்சி காவிகள் (@trichykaavigal) March 11, 2023
அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரூந்தில் பயணிக்கும்போது முன்னால் அதிமுக தொண்டன் எடப்பாடி அவர்களை நேருக்கு நேர் நின்று துரோகி என சொன்னதால் பரபரப்பு. pic.twitter.com/rn1Xg8hpEP