ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ரவுடி ராஜ்ஜியத்தை வேடிக்கை பார்க்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்!!.. பதறும் எடப்பாடி பழனிசாமி..!!
திருச்சி மாநகரில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைப்பதாக அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதில் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
சம்பவம் குறித்து அவல் மேலும் கூறியிருப்பதாவது:- திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது, யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 16, 2023
நடுரோட்டில் தரதரவென இழுத்து
சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது,
யார்க்கும்-எதற்கும் அஞ்சோம்
எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது,1/2 pic.twitter.com/VEy5DrEbqG
ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும்,சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.