ஒற்றை யானைத்தாக்கி கூலித்தொழிலாளி பலி.. உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
தேயிலை தோட்டத்தில் ஒற்றை யானை தாக்கியதில், கூலித்தொழிலாளி பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகாமையில் பவானி எஸ்டேட் என்ற தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த நிலையில், அங்கு கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் எஸ்டேட் பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.பின் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.