மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயிற்சியாளராக சாதிக்க துடிப்பவரா நீங்கள்?!: இதோ உங்களுக்காகவே காத்திருக்கும் அரிய வாய்ப்பு..!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் புதிதாக அமையவுள்ள எஸ்.டி.ஏ.டி மாவட்ட விளையாட்டு மையத்தில், தடகள பயிற்சியாளராக பணிபுரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியில், துவக்க நிலை தடகள பயிற் சிக்கான, எஸ்.டி.ஏ.டி மாவட்ட மையம், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் அமையவுள்ளது.
புதிதாக அமையவுள்ள இந்த மையத்தில், 100 தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பிக்க தகுதிகள்:-விண்ணப்பதாரர் 40 வயதுக்கு மிகாதவராகவும், தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பதக்கம் வென்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அல்லது சர்வதேச போட்டிகள் மற்றும் தேசிய அளவிளான சீனியர் போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
சம்பளம் : தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும். இது நிரந்தர பணியல்ல, முற்றிலும் தற்காலிகமானது.
தடகள பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். வரும் ஜனவரி 3 ஆம் தேதி மாலை, 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்களுக்கு, நேர்முகத் தேர்வு திருப்பூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் நடக்கும். மேலும் விபரங்களுக்கு, 7401703515, 67681616831 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.