மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி மூலம் வந்த எமன்.. நொடியில் பறிபோன உயிர்கள்.. கோர விபத்து..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மேலும் அதே சாலையில் திருவண்ணாமலையை நோக்கி லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு காரை பெங்களூரை நோக்கி சென்ற கார் முந்த முயற்சி செய்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.