மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து.. இளைஞர் கைது.!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசுவது போன்று சமூக வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தெற்குவாடியகாட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தில்நாதன் என்பது தெரியவந்தது.
இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது செந்தில் நாதனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர்.