தமிழை தவிர்க்கும் மாணவர்கள்.. கட்டாய மொழியாக்கப்படும் ஆங்கிலம்.. இதற்கு முடிவே கிடையாதா?..!  



english get 1st place in tamilnadu sslc exam

மே 19-ம் தேதியான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வுகளின் மூலம் மாணவர்கள்  பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர்.

மேலும் பாடவாரியாக அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. தமிழ் பாட மொழியாக உள்ள தமிழ் பேசும் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கவில்லை. 

Latest news

பாடவாரியான தேர்ச்சி விழுக்காட்டை பொருத்தவரையில் தமிழில் 95.55% நபர்களும், ஆங்கிலத்தில் 98.93% நபர்களும், கணிதத்தில் 95.54 % நபர்களும், அறிவியலில் 95.75% நபர்களும், சமூக அறிவியலில் 95.83% நபர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆங்கிலத்தில் 89 பேர் சுமார் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.