மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலசீட்டு நடத்தி நஷ்டம்.. பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் தற்கொலை.!
தான் நடத்தி வந்த ஏலசீட்டில் சிலர் பணம் செலுத்தாமல் அலைக்கழித்து, ரூ.7 இலட்சம் வரை பணத்தை நஷ்டமடைந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை வீதி, மரப்பாலம் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 50). இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பாக இருந்து ஏலசீட்டு நடத்தி வந்த நிலையில், பலரும் அவரிடம் பணம் கட்டி வந்துள்ளனர். சிலர் பணம் கொடுக்காமல் வாசுதேவனை ஏமாற்றி வந்த நிலையில், அவர்கள் ரூ.7 இலட்சம் வரை பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாசுதேவன் கூறவே, அவர்கள் பணம் தருகிறோம் என்று தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் வாசுதேவன் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியேற்றிய அவர் பெரியார் நகரில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளார்.
அங்கு தான் வைத்திருந்த பாட்டிலில் பெட்ரோலை வாங்கிய வாசுதேவன், அப்பகுதியில் உள்ள மைதானத்திற்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சூரம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வாசுதேவனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக சூரம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.