மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை பிறந்த 20 நாட்களில் பெண் பலி.. ஈரோட்டில் கண்ணீர் சோகம்.. தாயை தேடி கதறும் பச்சிளம் பிஞ்சு.!
சுகப்பிரசவத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண்மணி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, ரோஜா நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரின் மகள் மீரா (வயது 29). இவருக்கும், அதே பகுதியை சார்ந்த அபினேசன் என்பவருக்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது. மீரா கருவுற்ற நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மகளை தாய் வீட்டிற்கு தந்தை தணிகாசலம் அழைத்து சென்றார்.
கடந்த மாதம் டிச. 16 ஆம் தேதி மீராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரசவத்திற்காக ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சுகப்பிரசவம் மூலமாக மீராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சைக்கு பின்னர் மீரா வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், நேற்று வீட்டில் இருந்த மீரா மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தந்தை தணிகாசலத்திடம் தெரிவித்துள்ளார்.
தந்தை தணிகாசலம் பதறியபடி மருத்துவமனைக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், மீராவோ சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று தூங்க சென்ற நிலையில், இரவு 7 மணிக்கு மேல் மகள் எழுந்திருக்கவில்லை. தணிகாசலம் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மகள் மீராவை எழுப்புகையில், அவர் மயக்க நிலையில் இருந்தது உறுதியானது. இதனையடுத்து, அவரச ஊர்தி உதவியுடன் மீராவை பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மீரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தணிகாசலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மீரா குழந்தையை பிரசவித்து 20 நாட்களே ஆவதால் மருத்துவத்துறை விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.