அடேங்கப்பா... பேச்சுவழக்கு தமிழை பதியவைத்ததா நெடுஞ்சாலைத்துறை?.. நெட்டிசன்கள் கலாய்..!



Erode Anthiyur Corner

உலகின் மூத்த முதல் மொழியாக, தனக்கென பல சிறப்புகளையும், வரலாறுகளையும் கொண்ட தன்னிகரற்ற தமிழ்மொழி இன்று தனது அடையாளத்தை இழந்து வருகிறது. காலத்திற்கேற்ப ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றங்கள் வரும் என்பது இயற்கை என்றாலும், சமீபத்தில் ஏற்பட்டுள்ள பிறமொழி ஆதிக்கம் மற்றும் திணிப்புகள் நம்மிடையே தமிழ் மொழியை கலவைசொல்லாக்கிவிட்டது. 

இதில், பேச்சு வழக்கு என தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அடையாள பதாகை தமிழ் ஆர்வலர்களிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்தியூர் பிரிவு என்பதற்கு பதிலாக, நெடுஞ்சாலைத்துறை அந்தியூர் முக்கு (Anthiyur Corner) என்று பதாகை வைத்துள்ளது. 

இதனைக்கண்ட இணையவாசி ஒருவர் நெடுஞ்சாலைத்துறையின் தமிழுக்கு ராயல் சல்யூட் என கலாய்க்கும் வகையில் பேசி ட்விட் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும், அந்தியூர் முக்கு என்ற பதாகையை மாற்றிவிட்டு அந்தியூர் பிரிவு என பதாகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விசாரிகையில், நாம் பிரிவு என்று கூறுவதை மலையாளத்தில் முக்கு என்று அழைப்பதும் உண்டு. ஆனால், அந்தியூர் தமிழகத்தில் இருக்கும் ஊராகும். இதில், அந்தியூர் முக்கு என்பது பலகாலமாக அவ்வாறே அழைக்கப்பட்டு வந்துள்ளது உள்ளூர் மக்களிடம் கேட்கையில் உறுதியானது.