மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியுடன் காதல்.. கயவனை அடித்தே கொலை செய்த பெண் வீட்டார்.. ஈரோட்டில் சம்பவம்.!
பவானி அருகே காதல் பஞ்சாயத்தில் இளைஞர் பெண் வீட்டாரால் தாக்கப்பட்ட நிலையில், இறுதியாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பகூடல், கீழ்வாணி மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ் தனது பாட்டியுடன் தங்கியிருந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்ததாகவும் கூறப்படும் நிலையில், இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வெங்கடேஷை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த வெங்கடேஷ் அடாவடியாக பேசிய நிலையில், சிறுமியின் மனதை கெடுத்த கயவனுக்கு ஆதரவாக அவனின் சார்பில் 4 பேர் தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்பு மோதல் உருவாகிவிட, சிறுமியின் தந்தை மற்றும் அத்தை வெங்கடேஷை தாக்கியுள்ளனர்.
இதனால் தலையில் பலத்த காயத்துடன் பாதிக்கப்பட்ட வெங்கடேஷ், அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த வெங்கடேஷ், நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆப்பக்கூடல் காவல் துறையினர், சிறுமியின் தந்தை சரவணன், அவரின் அத்தை சித்ரா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.