மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுண்டைக்காய் பறிக்க சென்று உயிரைவிட்ட முதிய தம்பதி; காட்டுயானை தாக்கி சோகம்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானி சாகர், விளாமுட்டி வனப்பகுதிக்கு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த முதிய தம்பதி நஞ்சன் - துளசி அம்மாள்.
இவர்கள் சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்குள் உணவுக்காக சுண்டைக்காய் பறிக்க சென்றுள்ளனர். அப்போது, புதர் பகுதியில் பதுங்கியிருந்த ஒற்றை யானை ஒன்று, தம்பதிகளை துதிக்கையால் தாக்கி மிதித்து கொன்றுள்ளது.
நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால், உள்ளூர் மக்கள் காட்டுக்குள் சென்று பார்த்தபோது விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.