மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: பெண் திமுக வார்டு கவுன்சிலர் கொலை; காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பெண்மணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சடலம் அரைநிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம், சோளக்காளிபாளையம் பகுதியில் வசித்து வரும் பெண்மணி ரூபா (வயது 48). திமுக கட்சியின் பிரதிநிதியான இவர், சோளக்காளிபாளையம் 7வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
ரூபாவின் கணவர் தங்கராஜ். தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகன், ஒரு மகள் இருக்கின்றனர். ரூபா அங்குள்ள சுற்றுவட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கரூரில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், மாலை சுமார் 5 மணி ஆகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரின் மகன் தாயார் வேலைக்கு சென்றுவதாக கூறியவரின் வீட்டில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, அங்கு ரூபா காலையில் இருந்து வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். ரூபாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பார்த்தும் பலனில்லை. சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று கோகுல் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினர் தங்களின் வீடு ஈரோடு மாவட்டம் என்பதால், கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். காலையில் கோகுல் தாய் மயமானது தொடர்பாக புகார் அளித்து இருக்கிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் பாலமலை, பாலமலை - புன்னசத்திரம் சாலையில் இருக்கும் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தின் காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்துள்ளது.
இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சோதித்தபோது அது ரூபாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல் துறையினர் ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபா எதற்காக கொலை செய்யப்பட்டார்?. அவரை இங்கு அழைத்து வந்தது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.