மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
BTS-ஐ பார்க்க ரூ.14 ஆயிரம் பணத்துடன் புறப்பட்ட பள்ளி மாணவிகள்: 13 வயதுல தேவையா இது?.!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி பயின்று வரும் 13 வயதுடைய 3 சிறுமிகள், கொரிய பாடகர் குழுவான பிடிஎஸ் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் தென்கொரியா தலைநகரான சியோல் சென்று பிடிஎஸ்-ஐ பார்க்க, ரூ.14 ஆயிரம் பணத்துடன் ஈரோட்டில் இருந்து சென்னை வந்து, அங்கிருந்து விசாகப்பட்டினம் சென்று, பின் கப்பலில் சியோல் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இவர்கள் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி இரயிலில் பயணம் செய்த நிலையில், வழியில் வேலூரில் காவல் துறையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் சிறுமிகள் தாங்கள் பிடிஎஸ்-ஐ பார்க்க செல்வதாகவும், அவர்கள் விரும்பும் உணவு மற்றும் அவர்களின் பெயர் என பல தகவல்களை தெரிந்துகொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.