மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 108 அவசர ஊர்தி - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 15 பேர் படுகாயம்..!
தனியார் பேருந்தும் - அவசர ஊர்தியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அவசர ஊர்தி ஓட்டுநர் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் அவசர ஊர்தி - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த அரசூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், தனியார் பேருந்து மற்றும் அவசர ஊர்தியில் பயணித்த 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி பயணித்துள்ளது.
அவசர ஊர்தி சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி பயணித்து இருக்கிறது. இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகி, அவசர ஊர்தி சாலையோர பள்ளத்தில் கவிந்தது. பேருந்து சாலை தடுப்பில் மோதி நின்றது.