வீட்டுமனையில் திடீர் பள்ளம்.. சேர, பாரி மன்னர்கள் புதையல்?.. பொக்லைன் வாடகை தான் மிச்சம்.!



Erode Gopichettipalayam Treasure Rumor

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் எல்லம்மடை கிராமத்தில், கடந்த 34 வருடத்திற்கு முன்னர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், ஆலையில் பணியாற்றிய 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 5 ஏக்கர் பரப்பில் வீட்டுமனை வழங்கியுள்ளது.

வீட்டுமனைகளை பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் கட்டிடம் காட்டாமல் நிலத்தினை அப்படியே வைத்திருந்த நிலையில், செடிகள் மற்றும் கொடிகள் முளைத்து காணப்பட்டுள்ளது. இதனால் இடத்தின் உரிமையாளர் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 

erode

இதன்போது, ஒரு வீட்டுமனையில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்படவே, சுத்தம் செய்த பணியாளர்கள் உள்ளே எட்டி பார்க்கையில் ஆட்கள் இறங்கும் அளவு குழி இருந்துள்ளது. இந்த பள்ளம் தொடர்பான தகவல் உள்ளூர் மக்களிடையே புதையல் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. 

இதனால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரளாக திரண்டுவிட, கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்து, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். 

erode

இப்பகுதியை மன்னராட்சி காலத்தில் சேர மற்றும் பாரி மன்னர்கள் ஆட்சி செய்து வந்ததால், குழிக்குள் புதையல் இருக்கலாம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, காவல் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி பார்க்கப்பட்டது. 

புதையல் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் மக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில், கட்டிடம் கட்டும் போது கவனமாக செயல்பட சம்பந்தப்பட்ட மனையின் உரிமையாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.