திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேஸ் டியூபை மூக்கில் சொருகி இளைஞர் தற்கொலை; ஈரோட்டில் இளைஞர் பதறவைக்கும் செயல்.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எஸ்கேசி சாலை, முதல் வீதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவரின் மனைவி சுகந்தி. தம்பதிகளுக்கு 31 வயதுடைய சுந்தரம் என்ற மகன் இருக்கிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
மதிவதனசுந்தரம் தந்தையுடன் மளிகைக்கடைக்கு பொருட்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். சந்திரசேகர் - சுகந்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
மதிவதன சுந்தரம் தனது தாயாருடன் வசித்து வருகிறார். வேலை தொடர்பாக அவ்வப்போது தந்தை - மகன் நேரில் சந்திப்பது வழக்கமான விஷயம் ஆகும். இந்நிலையில், மதிவதன சுந்தரம் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தற்கொலைக்கு முடிவெடுத்த மதிவதன சுந்தரம், தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து, குழாயின் ஒரு பகுதியை மூக்கில் சொருகி, பிளாஸ்டிக் கவரை கொண்டு முகத்தை மூடி ரப்பரால் இறுக்கி கியாஸை சுவாசித்துள்ளார்.
இதனால் சிறிது நேரத்தில் மயங்கிய சுந்தரம் அங்கேயே விழுந்துவிட, அக்கம் பக்கத்தினர் சிலிண்டர் வாசனை வருவதை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விபரீதம் தெரிந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மதிவதன சுந்தரம் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.